Milky Mist

Wednesday, 24 April 2024

தோல்வியை வெற்றியாக்கிய பழங்களின் இனிப்புச் சுவை! சரிவில் இருந்து மீண்ட குடும்பம்!

24-Apr-2024 By ஜி.சிங்
கொல்கத்தா

Posted 17 Mar 2017

ஹிலாரி கிளிண்டனுக்கும் கோலிக்கும் பிடிக்கும் என்பதைத் தாண்டி பாப்ராய் ஐஸ்கிரீமுக்கு என்ன ஸ்பெஷல்? அது மறுபிறப்பின் அடையாளம்.  சரிவிலிருந்து மீண்டு நாட்டின் முக்கியமான பிராண்டுகளில் ஒன்றாகியிருக்கும் பாப்ராய் எட்டு ஆண்டுகளில் 12 கோடி ரூபாய் ஈட்டியிருக்கிறது.  

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-kunalcounter.jpg

குடும்பத் தொழில் நசிந்தபோது குனால் பாப்ராய் தன் வேலையை விட்டுவிட்டு கொல்கத்தா திரும்பினார். அங்கு பாப்ராய் ப்ரெஷ் மறும் நேச்சரெல்லே ஐஸ்கிரீம் வகைகளை அறிமுகம் செய்தார். எட்டே ஆண்டுகளில் 12 கோடி விற்பனை( மோனிருல் இஸ்லாம் மல்லிக்)

இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருந்தவர் குணால் பாப்ராய்(31). இவரது தொழிற்முயற்சி கனிந்து வெற்றி கிடைத்தது.

2007-ல் தன் தந்தை நடத்திக்கொண்டிருந்த துலிகா (குணாலின் அம்மா பெயர்)  என்ற ஐஸ்கிரீம் தொழில் சரிவுற்றதும் குடும்பம் பெரும் பிரச்னையை எதிர்கொண்டதை குணால் நினைவுகூர்கிறார். தொழிலாளர் பிரச்னைகள், சந்தையில் பிற ஐஸ்கிரீம்களின் வருகை ஆகியவற்றால் தொழில் நலிவுற்று சுமார் 30 லட்சரூபாய் கடன் ஏற்பட்டது.

“பெங்களூருவில் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் அனலிஸ்ட் ஆக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். தந்தைக்கு என் உதவி தேவைப்பட்டதால்  வேலையை விட்டுவிட்டு கொல்கத்தா திரும்பினேன்’’ என்கிறார் குணால். தெற்கு கொல்கத்தாவில் உள்ள பாலிகுங்கேவில் இருக்கும் அவரது வீடுதான் நிறுவனத்தின் தலைமையகமாகவும் இருக்கிறது.

அப்போது குணாலுக்கு 22 வயது. மீண்டும் புதிதாகத் தொடங்குவது பற்றி யோசித்தனர். “ எங்களுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது. ஐஸ்கிரீம் செய்வது மட்டும்தான் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.”

தன் தந்தை அனுவ்ராத் ( இப்போது 58), தம்பி நிஷாந்த் (இப்போது 27) ஆகியோருடன் ஆலோசித்து பழ ஐஸ்கிரீம் செய்வது என்றும் அதில் இயற்கையான உபபொருட்களையே பயன்படுத்துவது, செயற்கைப் பொருட்களைத் தவிர்ப்பது என்ற முடிவுக்கு குணால் வந்தார்.

"தங்களுடைய சிறப்புத் திறனைப் பயன்படுத்துவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விரிவாக்கம் செய்வது’’ என்று முடிவெடுத்ததாக அவர் கூறுகிறார். அவர்களிடம் இருந்தது 3 லட்ச ரூபாய்தான். “எங்கள் தாகுர்புகுர் தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. எனவே புதிய தொழிற்சாலை தேவைப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உள்ளூர் ஐஸ்கிரீம் முதலாளி ஒருவர் தோலிகுங்கேவில் இருந்த தன் தொழிற்சாலையை எங்களுக்குத்தர முன்வந்தார். ஆனால் அவருடைய நான்கு தொழிலாளர்களை வேலையில் தொடர அனுமதிக்கவேண்டும் என்றார். ஒப்புக்கொண்டோம்,’’ என்கிறார் குணால்.

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-family.jpg

தாயார் துலிகா, தந்தையும் பாப்ராயின் சி இ ஓவுமான அனுவ்ரத் பாப்ராய், தம்பி நிஷாந்த் ஆகியோருடன் குணால்.



அதன் பின்னர் மளமள என்று முன்னேறினர்.

அவர்களின் ஐஸ்கிரீம் வித்தியாசமானது: 100 சதவீதம் இயற்கையானது. வனிலா, சாக்கலேட் போன்ற வகைகளுடன் கறுப்பு செசேம், வசாபி, நலேன்குர் போன்ற சிறப்பு வகைகளும் உண்டு.

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-icecream.jpg

 சாதாரண வனிலா, சாக்கலேட் முதல் ஆரன்சு வனிலா, கறுப்பு செசேம், வசாபி, நாலன்குர் போன்ற சிறப்பு வகைகளுடன் சேர்த்து 50 வகைகளில் பாப்ராயின் ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன.


ஏற்கெனவே வசூல் செய்யமுடியாமல் கையைச் சுட்டுக்கொண்ட அனுபவம் உண்டு. ஆகவே விலையில் கழிவு தருவதில்லை, கடனுக்குத் தருவதில்லை என்கிற கொள்கைகளைப் பின்பற்றினர். “ கடனுக்குக் கொடுத்து வாங்குவதை விட விலையில் கிடைக்கும் சின்ன லாபமே போதும் என முடிவு செய்தோம். ‘’ என்கிறார் பாப்ராயின் சி இ ஓ அனுவ்ரத் பாப்ராய்.

2008ல் ரசல் தெருவில் உள்ள ப்ளோரியானா ரெஸ்டாரண்டுடன் ஒப்பந்தம் செய்து அவர்களின் முதல் கடை திறக்கப்பட்டது. “ இது பாதி வெற்றி. சந்தையில் எங்கள் பிராண்டை அறிமுகம் செய்தவகையில்,’’ என்கிறார் குணால்.

நிஷாந்த் பாப்ராய் 2008ல் ஹோட்டல் நிர்வாகம் படித்துக்கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது தங்களுக்கு ஏற்கெனவே ஓட்டல்கள், விடுதிகள், உணவு தயாரிப்பாளர்களுடன் நல்ல தொடர்பு  இருந்ததாகக் கூறுகிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-kunalbrother.jpg

குணால்(வலது), நிஷாந்த் – இரு சகோதரர்களும்  தொழிலில் ஈடுபட்டுள்ளனர்

நாங்கள் ஆரம்பத்தில் பெரும் ஓட்டல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு சப்ளை செய்துகொண்டிருந்தோம். பின்னர்தான் சில்லறை விற்பனையில் ஈடுபட்டோம்’’ என்கிறார் அவர்.

“கொல்கத்தாவில் முதல் நேரடி விற்பனைக் கடையை ஒரு மாலில் தொடங்கினோம். 150 சதுர அடி இடம் அது. பிரான்சைஸ் கொடுக்க கட்டணம் ஏதும் வாங்கவில்லை. ஏனெனில் அந்த கடைக்கான முதலீட்டை அதன் உரிமையாளரே செய்தார்’’ என்று சொல்கிறார் குணால்.

மெதுவாக அவர்கள் நிலைபெறத் தொடங்கினர். ப்ரான்சைசி கட்டணம் முதலில் ஐம்பதாயிரமாகவும் இப்போது 3.5 லட்சமாகவும் இருக்கிறது. இதில் பத்துசதவீதம் புதுப்பிக்கக் கட்டணமாக வாங்கப்படுகிறது.

இப்போது டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகர்களையும் சேர்த்து 25 பார்லர்கள் பாப்ராய் நிறுவனத்துக்கு உள்ளன.

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-icecream1.jpg

விஜயவாடா, ராய்ப்பூர், புனே  போன்ற நகரங்களையும் சேர்த்து 31 பார்லர்களாக இந்த எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,’’ என்கிறார் குணால்.

பாப்ராய்கள் பெரிதாக திட்டமிட்டுக் கனவு  காண்கிறார்கள். முதலில் ப்ரான்சைஸ்கள் கொடுத்தபோது, மூன்று கொடுத்தால் ஒன்று மூடப்பட்டுவிடும் என்கிற நிலை இருந்தது. ஆனால் தொடர்ந்து பிரான்சைஸ் கிளைகளுக்கு ஊக்கமூட்டி, இந்த மூடப்படும் நிலையை சதவீதமாகக் குறைத்தனர்.

 “எங்கள் பழைய தாகுர்புகுர் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15,000 -20,000 லிட்டர்கள் ஐஸ்கிரீம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். உற்பத்தி மற்றும் கிளைகளை அதிகரித்தல், வெளிநாடுகளுக்கு விரிவாக்குதல் போன்ற திட்டங்களும் உள்ளது,’’ என்கிறார் குணால். இப்போது பார்ட்னர்ஷிப் நிறுவனமாக அது இயங்குகிறது. எதிர்காலத்தில் தனியார் பங்குகளைப் பெறும் திட்டமும் உள்ளன.

https://www.theweekendleader.com/admin/upload/dec7-16-counter.jpg

பாப்ராயின் ஐஸ்கிரீம் பார்லர்கள் சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய 10 நகர்களில் உள்ளன

குணாலில் தாயாரான துலிகா பாப்ராயும் அவர்களுக்கு உதவியாக உள்ளார். குணால் தன் தாயாரை  பாப்ராயின் தலைமைக் கணக்காளர்  என்று அன்புடன் வர்ணிக்கிறார்.

“ அவருடைய அனுமதி இன்றி ஒரு பைசா கூட நாங்கள்  எடுக்கமுடியாது’’ சிரிக்கிறார் அவர்.

எவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்தாலும், மனஉறுதியுடனும் தொலைநோக்குடன் போராடினால் வெற்றிபெற முடியும் என்பதற்கு பாப்ராய்களே சாட்சி.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • He quit Rs 70,000 salaried job to start a business that is nearing Rs 10 crore turnover

    விளம்பரங்கள் தந்த வெற்றி

    நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Smooth sailing

    நினைத்ததை முடிப்பவர்

    ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்

  • iron man of trichy

    தரம் தந்த வெற்றி!

    தந்தையின் பழைய இரும்புக்கடையில் தொழில்நுணுக்கங்களை கற்று, முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சோமசுந்தரம். தமது நிறுவனத்தை ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வளர்த்தெடுத்ததில் அவரின் அயராத உழைப்புக் கொட்டிக்கிடக்கிறது.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Bareilly’s  king of oil

    மலையளவாகப் பெருகிய கடுகு!

    உபியில் பரேலி என்ற சிறுநகரில் கன்ஷ்யாம் குடும்பம் பரம்பரையாக கடுகு எண்ணெய் தொழிலில் ஈடுபட்டு வந்தது.  அதை தற்காலத்துக்கு ஏற்றவாறு  மாற்றி உபியின் எண்ணெய் அரசராக உயர்ந்திருக்கிறார் கன்ஷ்யாம் கண்டேல்வால். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.