மூன்று லட்சம் முதலீட்டில் தொடங்கிய டீக்கடை! ஆண்டு வருவாய் 100 கோடியைத் தாண்டி வளர்ந்திருக்கும் ஆச்சர்யக் கதை!
16-Sep-2024
By சோபியா டேனிஷ்கான்
இந்தூர்
இருவரும், ரினைஸ்சான்ஸ் வணிக மற்றும் நிர்வாக கல்லூரியில் 2014ஆம் ஆண்டு வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். தொடர்ந்து அவர்கள் பழைய போன்களை வாங்கி விற்கும் தொழிலும் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் அவர்களது சொந்த செலவுகளுக்குப் பணம் கிடைத்தது.
கல்லூரி முடிந்த பின்னர் இருவரும் அவரவர் வழியில்சென்றனர். அனுபவ், டெல்லி சென்றார். குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாரானார். மகனை ஐஏஎஸ் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற தந்தையின் கனவுப்படி கரோல் பார்க்கில் உள்ள வாஜிராம் மற்றும் ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஆனந்த், அவரது மைத்துனரின் கார்மென்ட் தொழிற்சாலைக்கு உதவியாக இருக்கச் சென்று விட்டார்.
இரண்டு ஆண்டுகள் வரை அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தனர். 2018ஆம் ஆண்டு ஒரு நாள் ஆனந்த், அனுபவை அழைத்தார். ஒன்றும் சரியில்லை. நாம் இருவரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். அனுபவ், டெல்லியில் இருந்து இந்தூருக்கு முதல் ரயிலைப் பிடித்து நண்பரைப் பார்க்க வந்துவிட்டார்.
எதிர்காலம் குறித்து இவரும் ஆலோசனை மேற்கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்துக் கொண்டபடி தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தனர். “எங்களது எண்ணத்தில் முதலில் உதித்தது ரியல் எஸ்டேட் தொழில்தான். பணம் சம்பாதிப்பதற்கு எளிதான வழியாக அது இருந்தது. ஆனால், அது தீவிர மூலதனம் தேவைப்படும் வணிகமாக இருந்தது. எங்களிடம் ரூ.3 லட்சம் மட்டுமே இருந்தது. அது ஆனந்தின் பெற்றோர் அவருக்கு கொடுத்த பணம்,” என்று அனுபவ் நினைவு கூர்ந்தார்.
“நான் டெல்லியை விட்டு வந்ததும் இந்தூரில் இருப்பதும் எனது தந்தைக்குத் தெரியாது. ஆனால், என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால், அதை அப்பாவிடம் சொல்வதற்கு அவருக்கு துணிவில்லை. எனவே டெல்லியில் இருப்பதாக நினைத்து எனக்கு தொடர்ந்து வாடகைக்கு, இதர செலவுகளுக்கு பணம் கொடுத்தார். தொழிலின் ஆரம்ப கட்டத்தில் இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.”
பல்வேறு கட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகு அனுபவ், ஆனந்த் இருவரும் ஒரு தேநீர் கடை தொடங்குவது என்று முடிவு செய்தனர். ஒரு பெண்கள் விடுதிக்கு எதிராக சந்தடி மிக்க பன்வர் குவா தெருவில் கார்னரில் ஒரு இடத்தைத்தேர்வு செய்தனர். “மாத வாடகை ரூ.18000 ஆக இருந்தது. ஒரு பெரிய மரம் இருந்தது. பார்ப்பதற்கு நல்ல இடமாக இருந்தது. எங்கள் நிறுவனத்துக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது. கடையின் எல்லா வேலைகளையும் நாங்களே செய்து கொண்டதால் சம்பளத்துக்கு வேலைக்கு ஆள் வைக்கவில்லை,” என்றார் அனுபவ்.
தொழில்முனைவுத்திறன் அவரது மரபணுவில் இருந்திருக்கலாம். அனுபவ் துபே, இந்தூரில் சொந்தமாக ஒரு தேநீர் கடை தொடங்கியபோது அவரது வயது 22. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான தன் தந்தைக்கு தெரியாமல் நண்பர் ஆனந்த் நாயக் என்பவருடன் இணைந்து தேநீர் அதைத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது தேநீர் கடை, 145 கடைகளுடன் ரூ.100 கோடி ஆண்டு வருவாய் அளிக்கும் நிறுவனமாக உயர்ந்தது. அவரது தேநீர் கடைகள் இந்தியாவில் 70 நகரங்களில் உள்ளன. மஸ்கட் மற்றும் துபாயில் தலா ஒரு கடையும் இருக்கின்றன.
சாய் சுதா பாரின் நிறுவனர்
அனுபவ் துபே ( நடுவில் இருப்பவர்), ஆனந்த் நாயக்(இடது புறம் இருப்பவர்), மேலும்
நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களும் உள்ளனர்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
“நாங்கள் முதல் சாய் சுதா பாரை 2016ஆம் ஆண்டு, ரூ.3 லட்சம் முதலீட்டுடன் தொடங்கினோம். பிரான்ஞ்சைஸ் முறையில் விரிவாக்கம் செய்தோம்,” என்றார் அனுபவ். இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் இருந்தே தொழில் திறமையுடன் இருந்து வருகிறார். நிறுவனத்துக்கு சொந்தமாக ஐந்து கடைகள் உள்ளன. மீதம் உள்ள 140 கடைகளும் பிரான்ஞ்சைஸ் முறையில் நடத்தப்படுகின்றன. அனுபவ் குழந்தையாக இருக்கும்போது அவர்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. அப்போதைய நினைவுகள் அவரது மனதில் வலுவாக பதிந்துள்ளன. அவர்கள் குடும்பம், இந்தூரில் இருந்து 670 கி.மீ தொலைவில் உள்ள 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட ரேவா என்ற சிறு நகரில் வசித்து வந்தது. உள்ளூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை அவர் படித்தார். “நாங்கள் நடுத்தரக் குடும்பத்துக்கும் கீழான நிலையில் இருந்தோம். நான் பள்ளிக்கு செல்லும்போது புதிய ஷூ வாங்க பணம் இல்லாததால் பழைய நைந்த ஷூவை நான் அணிந்து சென்றது இன்னும் எனக்கு நினைவுக்கு வருகிறது,” என்று ரேவா நகரில் தமது சிறுவயது அனுபவங்கள் பற்றிக் கூறுகிறார். “என்னிடம் ஒரே ஒரு செட் வெண்மை நிற சீருடை மட்டும் இருந்தது. என் அம்மா அதனை தினமும் துவைத்துத் தருவார். ஐந்தாம் வகுப்பு வரை நான் நோட்டில் எழுதுவதற்கு பென்சில்தான் உபயோகித்து வந்தேன். ஒரு ஆண்டு முடிந்ததும் நோட்டில் எழுதப்பட்டவற்றை எல்லாம் என் தாய் அழித்து தருவார். மீண்டும் அந்த நோட்டைத்தான் அடுத்த ஆண்டுக்கு உபயோகிப்பேன்.” இருப்பதை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தும் தாயின் பண்புடன் தந்தையின் புத்திக்கூர்மையும் ஒத்துப்போனது.
அனுபவ், தன்னுடைய குடிமைப்பணி தேர்வுகள் எழுதும் ஆசையை தூக்கிப் போட்டுவிட்டு, தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று நினைத்தார் |
“ரேவாவில் இருந்து 215 கி.மீ தொலைவில் உள்ள சில்பா என்ற ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் தாத்தா-பாட்டி வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், என்னுடைய தந்தை அவரது நண்பர் ஒருவரிடம் இருந்து காரை ஓசி வாங்கி வருவார்,” என்று பகிர்ந்து கொள்கிறார் அனுபவ். போகும் வழியில், சாலையில் பேருந்துக்காக நிற்பவர்களை காரில் ஏற்றிக் கொண்டு சென்று இறக்கி விடுவார். இதற்காக அவர்களிடம் பணம் வாங்குவார். அந்தப் பணத்தை வைத்து பெட்ரோல் போடுவார் என்கிறார் அனுபவ். “பணத்தை நிர்வகிப்பதற்கு நான் அந்த இளம் வயதிலேயே கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பைசாவையும் பயனுள்ளதாக சம்பாதித்தேன்,” என்றார் அனுபவ். எட்டாம் வகுப்பு முடித்த உடன், இந்தூரில் உள்ள கான்வென்ட் பள்ளியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரம் அவரது தந்தையின் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருந்தது. இந்தூரில் உள்ள கொலம்பியா கான்வென்ட் பள்ளியில் மகனை சேர்த்தார். அதேபோல அவருக்கான விடுதிக் கட்டணத்தையும் செலுத்தினார். “குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே அந்த பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்க முடிந்தது. எனவே என்னுடைய சகோதரர், வீட்டில் பெற்றோருடன் இருந்தார்,” என்றார் அனுபவ். ரேவா நகரை விட இந்தூர் மிகப்பெரிய ஊர் என்பதால் ஆரம்பத்தில், புதிய சூழலுக்கு பழகுவதற்கு சில காலம் ஆனது. பள்ளியில் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினார்கள். இந்த சூழல் வேறு ஒரு உலகம் போல அனுபவுக்குத் தோன்றியது. ஆனால், விரைவிலேயே நம்பிக்கையுடன் வளர ஆரம்பித்தார். விரைவில் அவருக்கு நண்பர்கள் கிடைத்தனர். 11ஆம் வகுப்புப் படிக்கும்போது ஆனந்த் நாயக்கை அனுபவ் சந்தித்தார். அவரது சிறந்த நண்பராக அவர் மாறினார். பின்னாளில் தொழிலிலும் பங்குதாரர் ஆனார். இருவருமே சராசரி மாணவர்கள்தான். சூழலைப் புரிந்து கொள்ளும் திறன்படைத்தவர்களாக இருந்தனர். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்தனர். தொடுதிரை மொபைல்கள் அந்த சமயத்தில்தான் சந்தைக்கு வந்தன. இருவரும் சேர்ந்து பழைய சாம்சங் மொபைல் போன் ஒன்றை ரூ.6000த்துக்கு வாங்கினர். “நாங்கள் இருவரும் தலா ரூ.2000 போட்டோம். மேலும் மூவர் மீதி உள்ள தொகையைக் கொடுத்தனர். நாங்கள் அந்த போனை மாணவர்களுக்கு தினசரி அடிப்படையில் வாடகைக்குக் கொடுத்தோம். பின்னர் அந்த போனை நல்ல விலைக்கு விற்றோம்.” “பின்னர் நாங்கள் பழைய சிடி 100 பைக்கை ரூ.19,000த்துக்கு வாங்கினோம். கல்லூரி காலத்தில் அதனை உபயோகப்படுத்தினோம். பின்னர் அதனை விற்று விட்டோம்.”
அனுபவ் தன் நண்பர்களுடன் கல்லூரி நாட்களில். |
இருவரும், ரினைஸ்சான்ஸ் வணிக மற்றும் நிர்வாக கல்லூரியில் 2014ஆம் ஆண்டு வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். தொடர்ந்து அவர்கள் பழைய போன்களை வாங்கி விற்கும் தொழிலும் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் அவர்களது சொந்த செலவுகளுக்குப் பணம் கிடைத்தது. கல்லூரி முடிந்த பின்னர் இருவரும் அவரவர் வழியில்சென்றனர். அனுபவ், டெல்லி சென்றார். குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாரானார். மகனை ஐஏஎஸ் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற தந்தையின் கனவுப்படி கரோல் பார்க்கில் உள்ள வாஜிராம் மற்றும் ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஆனந்த், அவரது மைத்துனரின் கார்மென்ட் தொழிற்சாலைக்கு உதவியாக இருக்கச் சென்று விட்டார். இரண்டு ஆண்டுகள் வரை அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தனர். 2018ஆம் ஆண்டு ஒரு நாள் ஆனந்த், அனுபவை அழைத்தார். ஒன்றும் சரியில்லை. நாம் இருவரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். அனுபவ், டெல்லியில் இருந்து இந்தூருக்கு முதல் ரயிலைப் பிடித்து நண்பரைப் பார்க்க வந்துவிட்டார். எதிர்காலம் குறித்து இவரும் ஆலோசனை மேற்கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே வாக்குறுதி அளித்துக் கொண்டபடி தொழில் தொடங்குவது என்று முடிவு செய்தனர். “எங்களது எண்ணத்தில் முதலில் உதித்தது ரியல் எஸ்டேட் தொழில்தான். பணம் சம்பாதிப்பதற்கு எளிதான வழியாக அது இருந்தது. ஆனால், அது தீவிர மூலதனம் தேவைப்படும் வணிகமாக இருந்தது. எங்களிடம் ரூ.3 லட்சம் மட்டுமே இருந்தது. அது ஆனந்தின் பெற்றோர் அவருக்கு கொடுத்த பணம்,” என்று அனுபவ் நினைவு கூர்ந்தார். “நான் டெல்லியை விட்டு வந்ததும் இந்தூரில் இருப்பதும் எனது தந்தைக்குத் தெரியாது. ஆனால், என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால், அதை அப்பாவிடம் சொல்வதற்கு அவருக்கு துணிவில்லை. எனவே டெல்லியில் இருப்பதாக நினைத்து எனக்கு தொடர்ந்து வாடகைக்கு, இதர செலவுகளுக்கு பணம் கொடுத்தார். தொழிலின் ஆரம்ப கட்டத்தில் இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.” பல்வேறு கட்ட தீவிர ஆலோசனைக்குப் பிறகு அனுபவ், ஆனந்த் இருவரும் ஒரு தேநீர் கடை தொடங்குவது என்று முடிவு செய்தனர். ஒரு பெண்கள் விடுதிக்கு எதிராக சந்தடி மிக்க பன்வர் குவா தெருவில் கார்னரில் ஒரு இடத்தைத்தேர்வு செய்தனர். “மாத வாடகை ரூ.18000 ஆக இருந்தது. ஒரு பெரிய மரம் இருந்தது. பார்ப்பதற்கு நல்ல இடமாக இருந்தது. எங்கள் நிறுவனத்துக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது. கடையின் எல்லா வேலைகளையும் நாங்களே செய்து கொண்டதால் சம்பளத்துக்கு வேலைக்கு ஆள் வைக்கவில்லை,” என்றார் அனுபவ்.
அனுபவ் சிறுவயதில் தமது சகோதரர் மற்றும் தந்தையுடன் |
“நாங்களே அந்த இடத்துக்கு பெயிண்ட் அடித்தோம். டிஜிட்டல் போர்டு அதிக செலவு பிடிக்கும் என்பதால் பெயர் பலகையையும் நாங்களே எழுதித் தயாரித்தோம். சந்தையில் பழைய மரசாமான்களை வாங்கினோம். இதன் மூலம் பெரும் அளவு பணத்தை மிச்சப்படுத்தினோம்.” அருகில் ஒரு பல் மருத்துவரிடம் பணியாற்றி வந்த மனோஜ் என்பவரை முதன் முதலாக வேலைக்குச் சேர்த்தனர். தேநீர் கடையில் இருந்து நன்றாக வருவாய் கிடைக்கத் தொடங்கிய உடன் இரு மடங்கு சம்பளம் தருகின்றோம் என்று சொல்லி அவரை வேலைக்கு சேர்த்தனர். “தொடக்க நாளன்று கடையின் வழியாகச் சென்றவர்களுக்கு இலவசமாக தேநீர் கொடுத்தோம். இருவரும் நகரைச் சுற்றி வந்து, சாய் சுதா பார் என்று பெயரிடப்பட்ட புதிய தேநீர் கடை எப்படி இருக்கிறது என்று கேட்டோம். உண்மையில் நல்ல வித்தியாசமானது என்ற பெயரைப் பெற்றது,” என்றார் அனுபவ். தங்கள் தொழிலின் ஆரம்ப காலகட்டங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். தங்கள் கடையை முன்னெடுக்க எல்லாவிதமான சந்தை முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். “தவிர நாங்கள் எங்களுடன் பள்ளியில், கல்லூரியில் படித்த நண்பர்களை இந்தூருக்கு வரும்படி அழைத்தோம். அவர்கள் வருவதற்கு நாங்கள் பணம் கொடுத்தோம். இந்த இடம் இளைஞர்களின் குரலால் நிரம்பியது. விடுதியில் இருந்த பெண்கள் இதை அமைதியான புதிய இடமாகப் பார்த்தனர். பெண்கள் தங்கள் நண்பர்களுடன் வர ஆரம்பித்தனர். பேப்பர் கப்களில் இருந்து மண்ணால் ஆன கிளாஸ்களில் சாக்லேட் தேநீர் போன்ற இளைஞர்களால் விரும்பப்படும் தேநீர், ரோஸ் தேநீர், பாரம்பர்ய மசாலா, இஞ்சி, ஏலக்காய் தேநீர், சிறப்பு வாய்ந்த பான் சுவையுடன் கூடிய தேநீர் என ஏழு வகையான தேநீரை அவர்கள் விற்பனை செய்தனர். தேநீரின் விலை ரூ.10 முதல் ரூ.200க்குள் இருக்கிறது. மேகி, சான்ட்விச்கள், பீட்சாக்கள் போன்ற இதர உணவு வகைகளையும் விற்பனை செய்கின்றனர். “மூன்று மாதங்களில் எங்களது இரண்டாவது பிரான்ஞ்சைஸ் தொடங்கினோம். விஷயங்கள் அந்த அளவுக்கு சென்று விட்டன,” என்றார் அனுபவ். ஆறு மாதம் கழித்துத்தான் அவரது தொழில் குறித்து அவரது தந்தைக்குத் தெரியவந்தது. ஆனால், அது பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. “சில நாட்கள் கழித்து, நான் டெட் டாக் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டேன். போதுமான தைரியத்துடன் இருக்க என் தந்தையையும் உடன் வருமாறு அழைத்தேன். நான் உரையை முடித்த உடன், என் தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டார். என் வாழ்க்கையில் முதன் முறையாக அவர் அப்படி என்னை கட்டிப்பிடித்தார்.” .”
பெருந்தொற்று காலகட்டத்துக்குப்
பிறகு உணவு மற்றும் பானங்கள் தொழில் மீண்டெழும் என்று அனுபவ் நினைக்கின்றார்
|
2016ஆம் ஆண்டில் இருந்து சாய் சுதா பார், ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருக்கிறது. சீராக பிரான்ஞ்சைஸ்களை திறந்து வருகின்றனர். ஒரு தனிப்பட்ட பிரான்ஞ்சைஸ் திறப்பதற்கு ரூ.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கின்றனர். “கடந்த ஒரு ஆண்டாக இரண்டு பொது ஊரடங்குகளின் போது, எங்களின் எந்த ஒரு கடையும் மூடப்படவில்லை. நல்ல வர்த்தகத்தை கொடுத்தன. இது உணவு மற்றும் பான தொழிலுக்கு மிகவும் மோசமான காலகட்டம். ஆனால், அதிலும் சமாளித்து பயணம் செய்வோம் என்று எங்களுக்குத் தெரியும்,” என்கிறார் நம்பிக்கையுடன்.
அதிகம் படித்தவை
-
அசத்துகிறார் ஆன்சல்!
மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.
-
போராடே என்னும் போராளி!
எதிர்பாராதவிதமாக தொழில் அதிபர் ஆனவர் மிலிந்த் போராடே. இவர் தொடங்கிய தமது துருவா நிறுவனம் கடந்த ஆண்டு 700 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. டிப்ளமோ படிப்பில் சேர்ந்தவர், தன் பேராசிரியரின் உந்துதலால் பட்டப்படிப்பு முடித்து, பின்னர் பட்டமேற்படிப்பும் முடித்து இதைச் சாதித்திருக்கிறார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை.
-
ஆடைகள் தொழிலில் ஆஹாவென வெற்றி!
அவர் ஐஏஎஸ் ஆகியிருக்கவேண்டியவர். அத்தேர்வில் தோற்றதால் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஓர் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அது 80 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். திருப்பூர் தொழில் அதிபர் ராஜா சண்முகத்தின் வெற்றிக்கதையை எழுதுகிறார் பி.சி.வினோஜ் குமார்
-
கனவுகளைக் கட்டுதல்
தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்
-
உழைப்பின் வெற்றி!
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை
-
துணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்
புலனாய்வு இதழியல் வரலாற்றில் தனிமுத்திரை பதித்தவர் நக்கீரன் கோபால், 1988ம் ஆண்டு அவர் நக்கீரன் இதழைத் தொடங்கியது முதல் இப்போது வரை துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக பீடுநடை போடுகிறார். அவரது வார்த்தைகளிலேயே அவரது வாழ்க்கை கதை...