Milky Mist

Friday, 19 September 2025

ஒரு தந்தையின் கனவில் பிறந்த புதுமையான ‘தூசியற்ற பெயிண்ட் !’

19-Sep-2025 By தேவன் லாட்
மும்பை

Posted 09 Feb 2018

1996 ஆம் ஆண்டில் ஒரு நாள் அதுல் இங்காலே, தானேவில் உள்ள தம்முடைய புதிய வீட்டுக்கு பெயிண்ட் அடித்தார். அப்போது உருவான மாசு காரணமாக, அவரது இரண்டு குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த தூசு இல்லாமல் பெயிண்ட் உருவாக்கக்கூடாதா என்று தோன்ற அதற்கான ஆய்வில் ஈடுபட்டார்.

20 ஆண்டுகளாக ஆராய்ச்சி, பரிசோதனை, கண்டுபிடிப்பு என காலங்கள் கடந்தன.  2014-ம் ஆண்டு, தமது மகள் நியாதியை பங்குதாரராகக் கொண்டு டஸ்ட்லெஸ் பெயிண்டிங் ( Dustless Painting) என்ற  ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்

https://www.theweekendleader.com/admin/upload/23-12-17-03painter1.JPG

அதுல் இங்காலே, தொலைக்காட்சி ஒன்றின் முன்னாள் பத்திரிகையாளரான தன் மகள் நியாதி உடன் இணைந்து தூசியற்ற பெயிண்டிங் கண்டுபிடித்திருக்கிறார். (புகைப்படங்கள்: ஆஸார் கான்)

 

2016-17-ம் ஆண்டில், ஆண்டு வருவாய் 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதுலின் ஆய்வும், பணியும், அவருக்கு இன்னும் லாபகரமான வருமானத்தைத் தரவில்லை. ஆனால், பணம் ஒருபோதும் அவர் நோக்கமாக இருக்கவில்லை. குழந்தைகளின் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, ஒரு முறையைக் கண்டறிவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

அதுல் ஆராய்ந்தார், முயற்சித்தார், தோல்வியடைந்தார். 15 நீண்ட ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தார். பல முறைகள் முயற்சி செய்தார். இறுதியாக, 2013-ம் ஆண்டு, அவருடைய நண்பர் வீட்டில், தொழில் முறையிலான தூசி அற்ற பெயிண்ட் கண்டுபிடிப்பை செய்து காட்ட அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

நாம் அவர்களை பேட்டி எடுக்கப் போனபோது, அதுல்(65), மகள் நியாதி(30) இருவரும், மும்பை செம்பூரில் உள்ள அவர்களின் இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

நியாதி தமது தந்தையின் தூசி அற்ற பெயிண்ட் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, வணிக செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். ”என் தந்தைக்கு பெயிண்டிங் தொழில் பிடித்தமான ஒன்று. அதுதான் என்னை, என்னுடைய பணியில் இருந்து விலக வைத்து அவரோடு இணைய வைத்தது,” என்று நம்மிடம் விவரித்தார். “அவர் ஒருபோதும் தம் முயற்சியை கைவிடவில்லை. இன்றைக்கு வரைக்கும், தூசி அற்ற பெயிண்டிங்கில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து விருப்பத்துடன் இருக்கிறார்.”

அதுலின் நண்பர் தீரஜ் காட்ஜில், அதுலிடம் தமது வீட்டுக்கு தூசி அற்ற பெயிண்ட் தொழில்நுட்பத்தின் படி பெயிண்ட் அடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்காக அவர், 3 லட்சம் ரூபாய் கொடுத்தார். 21 நாட்கள் பெயிண்ட் அடிக்கும்பணி நடைபெற்றது.

“அவருக்கு என்னுடைய ஆராய்ச்சி பற்றித் தெரியும். எனவே அவருடைய வீட்டில் இதை முயற்சி செய்யும் படி கூறினார்,” எனும் அதுல், “நாங்கள் அவர் வீட்டுக்குப் பெயிண்ட் அடித்தபோது, எந்தப் பொருட்களையும் எடுத்து வெளியில் வைக்கவில்லை. பல மாதங்களாக பயிற்சி கொடுத்த நபர்களை வேலைக்கு அமர்த்தினேன். பெயிண்ட் அடிக்கும் வேலை வெற்றிகரமாக நடைபெற்றது. தீரஜ் மிகவும் மகிழ்ந்தார்.”

அதுலின் பெயிண்ட் குறித்து நண்பர்களுக்கும் தீரஜ் பரிந்துரை செய்தார். இதனால், அதுலுக்கு  பணிகள் கிடைக்க ஆரம்பித்தன.

நாக்பூரில், 1962-ல் அதுல் பிறந்தார். வீர்மாதா ஜீஜாபாய் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார். எப்போதுமே தமது வகுப்பில் சிறந்த மாணவராக இருந்தார். வகுப்பிலேயே முதலிடம் பிடித்து வந்தார். படிப்பை முடித்த உடன் கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். 2004-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு  சென்று ஹனிவெல், கைபர் டிரேடிங்ங், பீட்டா கன்சல்டென்சி போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றினார்.

https://www.theweekendleader.com/admin/upload/23-12-17-03painter3.JPG

இந்த வணிகத்தில், இதுவரை தந்தை-மகள் இருவரும் 80-85 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

“நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் என்னுடைய ஆய்வு எப்போதும் போல் தொடர்ந்து கொண்டே இருந்தது,” என்று விவரிக்கும் அதுல், “இந்த ஆய்வுக்காக அதிக அளவு பணம் முதலீடு செய்திருக்கிறேன்.”

இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் 1998-ல் அதுல் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. எனினும் மன தைரியத்தை இழக்காமல் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். “2004-ம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். ஒரு வழியாக 2011-ம் ஆண்டு, என் முயற்சியில் வெற்றி பெற்றேன். என்னுடைய சொந்த வீட்டுக்கு தூசி அற்ற பெயிண்ட் அடித்தேன்.”

2014-ம் ஆண்டு அதுல், தம் தொழிலைத் தொடங்க, 28 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். தூசியைக் கட்டுப்படுத்தும் ஒரு இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். அதை உபயோகித்து தூசியற்ற முறையில் பெயிண்ட்  அடித்தார்.

ருயா கல்லூரியில் மாஸ் மீடியாவில் இளநிலைப் பட்டம் பெற்ற நியாதி, 2009-ம் ஆண்டில், பங்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த பின்னர், சி.என்.பி.சி-யில் சேர்ந்தார். தந்தைக்கு உதவியாக, தூசியற்ற பெயிண்டிங் பணிக்காக 2014-ல் தம் வேலையை ராஜினாமா செய்தார்.

“இந்தத் தொழிலை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்தும், இந்தத் தூசியற்ற பெயிண்டை மக்களை, எப்படி ஏற்றுக் கொள்ளச் செய்வது என்பது குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசனை செய்தோம்.”

எனினும், இரண்டு வருடங்களாக எந்த ஒரு தொழில்வாய்ப்பபும் கிடைக்கவில்லை. எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான், விளம்பரத்துக்கும் சிறிது முதலீடு செய்யவேண்டும் என்பதை நியாதி உணர்ந்தார்.

“ஆரம்ப கால கட்டத்தில் எங்களுக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை. பொது இடங்களிலும், ஆன்லைனிலும் நாங்கள் விளம்பரங்கள் செய்யத் தொடங்கினோம்.” என்ற நியாதி, “ஆனால், இது ஒரு புதிய முறை என்பதால், பாரம்பரிய பாணியை விட அதிக செலவு மிக்கதாக இருந்தது. இது வரையிலும் கூட வேலை கிடைப்பது பிரச்னையாக இருக்கிறது. ஆனால், மிக விரைவிலேயே மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.

தொழில் தொடங்கும்போது, ஒரு பின்னடைவாவது ஏற்படத்தான் செய்கிறது.  ஆர்கிடெக்ட்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களின் மூலம் பணிகளை எடுத்துச் செய்தனர். ஆனால், அவர்களில் சிலர் பணம் கொடுக்கவில்லை என்பதால் இது சரியாக வரவில்லை.

https://www.theweekendleader.com/admin/upload/23-12-17-03painter2.JPG

பெயிண்ட் அடிக்கும் ஊழியர்களுடன் அதுல் மற்றும் நியாதி

“நாங்கள் சந்தையில் முன்னணியில் இருக்கும் பொருட்களை மட்டுமே உபயோகித்து, உயர் தர சேவை வழங்குகிறோம்,” என்று சொல்லும் நியாதி, “ஆனால், மக்கள் பணம் தர தயாராக இல்லை. பெரிய பெயர்களைக் கொண்ட சில ஆர்க்கிடெக்ட்கள் எங்களுக்கு வர வேண்டிய லட்சகணக்கான ரூபாய் பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டனர்.  இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதில் இருந்து பாடம் கற்ற நாங்கள் தொடர்ந்து பயணித்தோம்.”

தூசியற்ற பெயிண்ட் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெரும் போராட்டமாக இருந்தது. இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் போது, அவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்ததனர். கண்காட்சிகளில் பங்கேற்று விளம்பரம் செய்தனர். ஆனால், பதிலாக எந்தப் பணிகளும் கிடைக்கவில்லை.

பெரும் போராட்டத்துக்குப் பின்னர், 2016-ம் ஆண்டு மும்பையில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் பெயிண்ட் அடிப்பதற்கான ஒரு வேலை அவர்களுக்குக் கிடைத்தது. 18,000 சதுர அடி இடத்தில் 8 ஊழியர்களுடன் 43 நாட்கள் பெயிண்ட் அடித்தனர்.

“பெயிண்ட் அடிக்கும் போது, தூசியின் காரணமாக குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தூசியற்ற பெயிண்ட் அடிப்பதற்காக அந்தப் பள்ளியின் அறங்காவலர் எங்களை அணுகினார். குழந்தைகளுக்கான இடம் என்பதால், யோசிக்காமல், நாங்கள் அந்த வேலையை எடுத்துச் செய்தோம்,” எனும் அதுல், “எங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இப்போது அவர்கள் மூலம் இன்னொரு பள்ளியிலும் தூசியற்ற பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது.”

இதுவரை, 37 இடங்களில் தூசியற்ற பெயிண்ட் அடித்திருக்கின்றனர். பெரும்பாலும் வீடுகளுக்குதான் இந்த பெயிண்ட் அடித்திருக்கின்றனர். எனினும், பள்ளிகள் தவிர, காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கும் இந்த பெயிண்ட் அடித்திருக்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/23-12-17-03painter4.JPG

தூசியற்ற பெயிண்ட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அதுல், நியாதி இருவரும் உணர்கின்றனர்.

நியாதியும், அதுலும் இந்த நிறுவனத்தை நடத்துவதற்குள் பல நிதி சிக்கல்களைச் சந்தித்தனர். இதுவரை அவர்கள் இருவரும், 80-85 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பைச் சந்தித்தனர்.

எனினும், இந்த பெயிண்ட்டுக்கான எதிர்காலம் குறித்து நியாதி நம்பிக்கையுடன் இருக்கிறார். இப்போது, ஓம் ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் நல்ல முறையில் பணிகளைத் தருகின்றனர்.

“எங்களுடைய பெயிண்ட் புதிதான ஒன்று. எனவே, அதை முன்னெடுக்கும் வேகம் குறைவாக இருக்கிறது. மக்கள் இதனை விரைவிலேயே ஏற்றுக் கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார் நியாதி.   “இந்தியாவில் இது போன்ற பெயிண்ட் அடிக்கும் முறையை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சந்தையில் நாங்கள்தான் முதலில் நுழைந்தோம்.  அதைச் சாதகமாகக் கொண்டு எங்கள் நிறுவனத்தைக் கட்டமைப்போம்.”

பணம் இறுதியில் வரவே செய்யும். ஆனால் அதுல்,  எதை விரும்புகிறாரோ தொடர்ந்து அதை  செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • After failing in first business he built a rs 1500 crore turnover business

    கடலுணவில் கொட்டும் கோடிகள்

    இரண்டு லட்சம் ரூபாய் கடனில் மீன்பிடிப்படகுகள் வாங்கி தொழில் தொடங்கிய தாரா ரஞ்சன் முன் அனுபவம் இல்லாததால் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இன்று ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • The colour of success is green

    ஏற்றம் தந்த பசுமை

    ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Successful Parotta Master who became owner of a chain of restaurents

    பெரிதினும் பெரிது கேள்!

    சென்னை கடற்கரையில் சிறுவயதில் தந்தையின் தள்ளுவண்டி உணவுக் கடையில் உதவி செய்தார் சுரேஷ் சின்னசாமி. இன்றைக்கு சென்னையில் உள்ள தோசக்கல் சங்கிலித் தொடர் உணவகங்களின் உரிமையாளர். ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • How a school dropout went on to build a Rs 350 crore turnover global software business

    வைரஸ் எதிர்ப்பாளர்

    பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டவர், இன்று உலகளாவிய அளவில் மென்பொருள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி ஆண்டுக்கு 350 கோடி வர்த்தகம் செய்கிறார். மாதம் ரூ400க்கு கால்குலேட்டர் பழுதுபார்க்கும் வேலையில் தொடங்கிய மனிதரின் வெற்றிக்கதை இது

  • Smooth sailing

    நினைத்ததை முடிப்பவர்

    ஹைதராபாத்தில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கப்பட்ட ட்ரங்கன் மங்கி நிறுவனம் இன்று ஐந்து ஆண்டுகளில் 110 கடைகளுடன் 60கோடி ரூபாய் ஆண்டுவருவாய் ஈட்டுகிறது. இதன் நிறுவனர் சாம்ராட் ரெட்டியின் வெற்றிக்கதையை எழுதுகிறார் சோபியா டேனிஷ்கான்

  • Fabric of success

    சேலையில் வீடு கட்டுபவர்!

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில்  வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.