Milky Mist

Thursday, 25 April 2024

கோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்!

25-Apr-2024 By ரேணுகா சிங்
Hyderabad

Posted 13 Apr 2017

கோடை வந்துவிட்டாலே குளுமையான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்று விடுமுறையை அனுபவிப்பவர்கள் விரும்புவார்கள். நாட்டில் நிறைய மலையிடங்கள் இருக்கின்றன என்றாலும்  அமைதியான நெருக்கடி இல்லாத மலையிடத்தைக் கண்டறிவது ஒரு சவால்தான்!

உச்சகட்ட கோடையில் மலை நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துவிடுகிறது. அது ஒரு சிக்கல்தான். மேலும் தங்குமிடம், பயணம் அனைத்தும் அதிக செலவு வைக்கின்றன. ஆகவே வழக்கமாகப் போகும் இடங்களைத் தவிர்த்து, நாட்டின் அமைதியான மலைப் பகுதிகளைச் சென்று காண்பது பயணத்தின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

அதிகம் சுற்றுலாவுக்குச் செல்லப்படாத, கூட்டமில்லாத ஏழு மலைப்பிரதேசங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறோம். அவை அமைதி, இயற்கை அழகு நிரம்பியவை. உங்களைத் தளர்த்திக்கொள்ள உதவும்.                                      

https://www.theweekendleader.com/admin/upload/mar6-15-lead%20chail.jpg

தேவதாரு மரங்களின்  நடுவே  இயற்கையின் பேரமைதியில் திளைக்க சைல் உங்களை வரவேற்கிறது(படங்கள்: ரேணுகா சிங்))

சைல்

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் சிம்லாவில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ளது சைல். தேவதாரு மரங்களின்  நடுவே  இயற்கையின் பேரமைதியில் திளைக்க சைல் உங்களை வரவேற்கிறது.  மலையேற்றம், பண்ணைகளில் உலவுதல், கூடைப்பந்து, கிரிக்கெட் விளையாடுதல் போன்ற செயல்பாடுகளுக்கும் இடம் உள்ளது. சைலில் உள்ள விளையாட்டுமைதானம் உலகின் உயரமான இடத்தில் உள்ள மைதானம் ஆகும்.

எங்கே தங்குவது: தி சைல் பேலஸ்

எப்படிச் செல்வது: புதுடெல்லியில் இருந்து கால்கா ஷதாப்தி ரயிலில் ஏறி, டாக்ஸி அல்லது பேருந்து மூலமாக சைல் செல்லலாம்.

ராய்கார்

ஹிமாச்சலப்பிரதேசத்தில் சிர்மாவூர் மாவட்டத்தில்  இருக்கும் அழகான மலைப்பிரதேசம் ராய்கார்.  முகாம் இடுவதற்கும், மலையேற்றம் ஆற்றுப்பயணம்,  பாறையில் இறங்குதல் போன்ற பல செயல்பாடுகளுக்குத் தகுதியான இடம்.

இயற்கையை உண்மையாகவே நேசிப்பவர் இங்கே விடுதலை உணர்வுடன் உலவலாம். பறவைகளின் பாடலைக் கேட்கலாம். பீச் பழத்தோட்டங்களில் ருசிக்கலாம்.  மலைகளின் அழகுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கலாம்.

எங்கே தங்குவது?: கேம்ப் பீச் வேலி து

எப்படிச் செல்வது?: சண்டிகாரில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது. புதுடெல்லியில் இருந்து கால்காவுக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து டாக்ஸி மூலமாகவும் செல்லலாம்..

https://www.theweekendleader.com/admin/upload/mar6-15-LEAD1.jpg

டார்ஜிலிங் அருகே உள்ளது குர்சியாங். இதற்கு ஆர்க்கிட்டுகளின் நிலம் என்று அர்த்தம்.


சட்டால்

சட்டால் என்றால் ஏழு ஏரிகள்.  உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள  நைனிடால் மாவட்டத்தில் உள்ளது இந்த இடம்.  இது அடர்ந்த காடுகள் கொண்ட மலைப்பிரதேசம்.

இங்கே ஒரு காட்டேஜில் தங்கிக்கொண்டு, மின்னணுச் சாதனங்களை அணைத்துவைத்து, இயற்கையோடு இணைந்திருத்தலே இப்பிரதேசத்தை அனுபவிக்கும் வழி. நடைப் பயிற்சி, மீன்பிடித்தல், படகு ஓட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடலாம்.

எங்கே தங்குவது?: சட்டால் வனத்துறை மாளிகை

எப்படிச் செல்வது?: டெல்லியில் இருந்து பேருந்து மூலம்(ஓர் இரவுப்பயணம்) காத்கோடம் சென்று அங்கிருந்து ஒன்றரை மணி நேரத்தில் சட்டால் அடையலாம்.

 

குர்சியாங்

மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நடுத்தர நகர் குர்சியாங்.  டார்ஜிலிங்கை விட குறைவாகவே அறியப்பட்டாலும் இந்த இடம் மிகவும் அழகானது. குர்சியாங் என்ற பெயருக்கு ஆர்க்கிட்டுகளின் நிலம் என்று அர்த்தம். அழகான நிலக்காட்சிகளுக்கு இது பெயர்போனது.

இங்கிருந்து பார்த்தால் கஞ்சன்சங்கா மலைத்தொடரைக் கண்டு மகிழலாம். ஆங்கிலேயர் காலக் கட்டடப் பாரம்பரியமும் இங்கே உள்ளது.  பழைய பள்ளிக்கட்டடங்கள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் நாம் காண்பதற்காகக் காத்திருக்கின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/mar6-15-%20lead%20yuksom.jpg

யுக்சோமில் சிக்கிமின் பழைமையான மடாலயம் உள்ளது


குர்சியாங்கில் எங்கே தங்குவது?: கெட்டில்வேலே ஹோம் ஸ்டே (குர்சியாங்கில் இருந்து பத்து கிமீ தள்ளி)

எப்படிச்செல்வது?: என் ஜே பி ரயில் நிலையம் அல்லது பக்டாக்ரா விமானநிலையம் ஆகியவற்றில் இருந்து ஒன்றரை மணி நேரப்பயணம்

யுக்சொம்

யும்சொம் சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் தலைநகரம் என்கிற தகவலே ஆர்வத்தைக் கூட்டுவது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரில் சிக்கிமின் மிகப்பழைய மடாலயம் உள்ளது. டப்டி என்று அழைக்கப்படும் இது 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மடாலயங்களுக்கு இடையே ஊர்மக்களி விருந்தோம்பலோடு இயற்கையை நேசிக்க சரியான இடம் இதுவாகும்.

எங்கே தங்குவது?: லிம்பூ ஹோம்ஸ்டே

எப்படிச் செல்வது?: என் ஜே பி(நியூ ஜல்பைகுரி) ரயில் நிலையம் அல்லது பக்டாக்ரா விமானநிலையத்தில் இருந்து டாக்ஸி எடுத்தால் 3 மணி நேரப்பயணம்.

https://www.theweekendleader.com/admin/upload/mar6-15-lead%20wellington.jpg

தேயிலைத்  தோட்டங்களும் தனிமையான நடைவழிகளும் நிறைந்தது வெல்லிங்டன்

வெல்லிங்டன்

குன்னூருக்கு அருகே உள்ள வெல்லிங்டன் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஒரு ராணுவக்கல்லூரி அமைந்துள்ளது.

கும்பல் நிறைந்த ஊட்டிக்கு நேர்மாறாக இயற்கையை எளிதாக ரசிக்கத் தகுந்த இடம் இதுவாகும். தேயிலைத் தோட்டங்கள், அழகிய நிலகாட்சிகள் நம்மைக் குதூகலப்படுத்தும்

எங்கே தங்குவது?: சன்வேலி ஹோம் ஸ்டே (குன்னூர்)

எப்படிச் செல்வது?: பீளமேடு விமானநிலையத்தில் இருந்து (கோவை) டாக்ஸி அல்லது பேருந்துமூலம் செல்லலாம்.

https://www.theweekendleader.com/admin/upload/mar6-15-lead%20dandeli.jpg

டாண்டெலியில் நிறைய நீர்விளையாட்டுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது

டாண்டெலி

டாண்டெலி ஏராளமான காடுகளும் வனவிலங்குகளும் இருக்கும் இடம். வடக்கு கர்நாடகாவில் இருக்கும் இந்த இடத்துக்கு  எளிதாக பெங்களூரு, கோவா வழியாகச் செல்லலாம். நீர்விளையாட்டு மற்றும் சாகசவிளையாட்டுகள் புரிவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

எங்கே தங்குவது?: டாண்டெலி வன முகாம், காளி சாகச முகாம், பைசன் ரிவர் ரிசார்ட்

எப்படிச் செல்வது?: பெங்களூரில் இருந்து அல்னாவாருக்கு ரயிலில் செல்லவும். அங்கிருந்து டாக்ஸியில் ஒரு மணி நேரப்பயணம்.

ஆக, இந்தியாவின் சிறந்த மலைப்பகுதிகள் உங்களை அழைக்கின்றன. இந்த கோடைக்கு எங்கே போகிறீர்கள்?


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • super non veg tiffin centre in dindigul

    அசத்தல் 'டிபன்’ ஸ்டால்

    தமிழ்நாட்டின் பிரியாணி தேசம் என்கிற மகுடம் சூட்டி நிற்கிறது திண்டுக்கல். இதே நகரில் அசைவம், சைவப் பிரியர்களை ஒரு சேர சுண்டி இழுக்கும் அற்புத சுவைமிகு உணவகமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்

  • Places to visit during this summer vacation

    குளுகுளு இடங்கள்

    இந்தக் கோடை விடுமுறையில் குளிர்பிரதேசங்களுக்குச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் மனதில் வழக்கமான இடங்களே தோன்றுகிறதா? இங்கே அவ்வளவாக பிரபலமாகாத ஏழு இடங்களைப் பற்றி ரேணுகா சிங் எழுதுகிறார். அவை வழக்கமான இடங்களுக்குப் பக்கத்தில் இருப்பவையே