Milky Mist

Tuesday, 19 March 2024

பழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்!

19-Mar-2024 By நரேந்திரா கௌசிக்
புதுடெல்லி

Posted 15 Mar 2017

தெற்கு டெல்லிப்பகுதியில் ஒரு பெரிய செல்போன் கடைக்கு வெளியே பழைய போன்களை பழுதுநீக்கி விற்றவர் இன்று அதே தொழிலை 150 கோடிரூபாய் புரளும் பெரிய நிறுவனமாக மாற்றி இருக்கிறார். இதை எட்டே ஆண்டுகளில் நிகழ்த்தி இருக்கிறார்.

இன்று யுவராஜ் அமன் சிங், பழைய போன்களை விற்கும் தொழிலில் முக்கியமான நபராக இருப்பவர். அவர் தன் தொழிலின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/jan3-17-mobile1.jpg

டெல்லியில் சோனி எரிக்சன் கடைவாசலில் சாலையோரமாக ஒரு மேசையில் பழைய போன்களை விற்பனை செய்த யுவராஜ் அமன் சிங், இன்று 150 கோடி ரூபாய் நிறுவனம் ஒன்றுக்கு தலைவராக இருக்கிறார்.(படங்கள்: நவ்னிதா)


சாலையோரத்தில் ஒரு மேசையைபோட்டு போன்களை விற்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் பெரும் கூட்டம் சேர ஆரம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசைக் கூப்பிடவேண்டி இருந்தது,’’ என்கிறார் 34 வயதாகும் இந்த முதல் தலைமுறை தொழிலதிபர். தெற்கு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 50,000 பழுதுநீக்கப்பட்ட பழைய போன்களை விற்கிறது. அதேபோல் பழைய டேப்லட்கள், பவர் பேங்குகள், மொபைல் போன் உபகரணங்கள் ஆகியவற்றையும் விற்கிறார்கள். டெக்னிக்ஸ் க்ரூப் ஆப் கம்பனிகள் என்ற குழுமத்தின் உப குழுமமாக ராக்கிங் டீல்ஸ் உள்ளது.

ஆப்பிள், சாம்சங், சோனி எரிக்சன், எல்ஜி, மைக்ரோமாக்ஸ், நோக்கியா, ஹெச்டிசி, சோனி, சியாமி, ப்ளாக்பெரி போன்ற நிறுவனங்களிடம் இருந்து திருப்பி வாங்கப்பட்ட, பெட்டியில் அடைக்கப்படாத, மற்றும் பழைய போன்களை வாங்கி அவற்றை சரிசெய்கிறார்கள். இதற்காக டெல்லி (15000 .அடி), பெங்களூரு (3000 .அடி) ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் நோய்டாவில் 5000 .அடி யூனிட் ஒன்றும் உள்ளது. இங்கே பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சரிசெய்கிறார்கள். அவர்களின் மொத்த விற்பனையில் 10 சதவீதம் ஏற்றுமதியில் கிடைப்பதாக சிங் கூறுகிறார்.

ஆன்லைனிலும் டெல்லியில் இருக்கும் 16 கடைகளிலும் இந்த போன்களை வாரண்டியுடன் விற்கிறார்கள். புதிய போன்களைவிட 40 சதவீதம் குறைந்த விலையில் இவை விற்கப்படுகின்றன.

https://www.theweekendleader.com/admin/upload/jan3-17-mobile2.jpg

சிங் தலைமையில் ராக்கிங் டீல்ஸ் 200 பேர் வேலைபார்க்கும் நிறுவனமாக மாறி உள்ளது.



டெக்னிக்ஸ் எலெக்ட்ரானிகஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் ராக்கிங் டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான சிங் இங்கிலாந்தில் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் படித்துள்ளார்.

அவர் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் தன் மைத்துனரின் வேர்ஹவுஸ் ஒன்றில் வேலை பார்த்தார். 2003-ல் இந்தியா திரும்பியதும் டாடா டெலிசர்வீசஸின் பிரான்சைஸ் ஒன்றை எடுத்தார்.

டாடா நிறுவனத்தின் கருவிகளை விற்பதிலும் டாடா ஸ்கை இணைப்புகளைக் கொடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டாலும் இந்த புதிய பொருட்களை விற்பதில் லாபம் மிகக்குறைவாக இருப்பதைக் கண்டார்.

டீலர்களே பெருமளவு லாபத்தைப் பெறுகிறார்கள். கீழே இருப்பவர்களிடம் அவர்கள் தார்மீக முறைப்படி நடந்துகொள்வதில்லை,’’ என்கிறார் சிங்.

2005-ல் முன்னாள் டாடா பணியாளர் ஒருவர், சோனி எரிக்சன் பணியாளர் ஒருவரை அறிமுகம் செய்வித்தார். அவர் சோனி எரிக்சனின் பழைய போன்களை விற்கும் வாய்ப்பைத் தந்தார்.

தெற்கு டெல்லியில் உள்ள சோனி எரிக்சன் கடையின் வாசலில் பழைய போன்களை விற்க ஆரம்பித்தார் சிங்.

https://www.theweekendleader.com/admin/upload/jan3-17-mobile3.jpg

பெங்களூரு, டெல்லி, நோய்டாவில் உள்ள ராக்கிங் டீல்ஸ் தொழிற்சாலைகளில் பழையபோன்களை சரிசெய்கிறார்கள்



நல்ல வரவேற்பு இருந்தது. அதிலிருந்து சிங் திரும்பிப்பார்க்கவே இல்லை. “இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த தொழில் என்பதை உணர்ந்தேன். இதில் நல்ல லாபமும் இருந்தது,’’ என்கிறார்.

சாம்சங் நிறுவனத்துடன் 2008-ல் அவர்களின் பழைய போன்களை திரும்பப்பெறுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டார். அவற்றை சரிசெய்து ப்ளிப்கார்ட் மூலம் விற்றார். ராக்கிங் டீல்ஸ் உருவானது. முதல் ஆண்டிலேயே 20 கோடிக்கு விற்பனை. ஷாப் க்ளூஸ், இபே, ஸ்னாப் டீல், குயிக்கர், ஜங்க்லீ, ஸாப்பர் ஆகிய தளங்களிலும் இவர்களின் போன்கள் கிடைக்கின்றன.

அமெரிக்காவில் விற்பனைக்காக ஒரு பிரிவு வைத்துள்ளனர். வேறு சில நாடுகளுக்கும் விரிவு படுத்தும் திட்டம் உள்ளது. ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் 3 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை வாரண்டியுடன் பழைய போன்களை விற்கிறது. சுமார் 24 பரிசோதனைகளுக்குப் பின் அவை விற்பனைக்கு வருகின்றன.

இவை மூன்று பிரிவாக உள்ளன. ஏ (கீறல்கள் இல்லாதவை), பி (சிறு கீறல்கள் உள்ளவை), மற்றும் சி (ஒரளவு சிதைவு உள்ள போன்கள்) - விலையும் வேறுபடுகிறது. ப்யூச்சர்டயல், டெராஸிபார் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து போன்களை சரிசெய்வதில், சான்றளிப்பதில், அவர்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

டிடிடிசி கூரியர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலமாக தங்களால் விற்கப்பட்ட பழைய போன்களை மறு பழுதுபார்ப்பதற்காக திரும்பப்பெறுகிறார்கள். 200 பேர் பணிபுரியும் நிறுவனமாக ராக்கிங் டீல்ஸ் வளர்ந்துள்ளது.
ப்ரேம் சிங் என்கிறவர்தான் தன் நிறுவனமான டெக்னிக்ஸில் நீண்டகாலமாகப் பணிபுரிகிறவர் என்கிற சிங், தன் நிறுவனத்தில் இருக்கும் மூத்த பணியாளர்களை அவர்களின் உழைப்புக்காகப் புகழ்கிறார்.

நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் சிங்கின் அடுத்த இலக்கு ராக்கிங் டீல் என்கிற பிராண்டை பலப்படுத்துவதுதான். “நான் வாங்கி விற்கும் நிலையைக் கடந்துவிட்டேன். எங்கள் பிராண்டை மேலும் வலுப்படுத்துவதுதான் இப்போது முக்கியம்,’’ என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/jan3-17-mobile4.jpg

ராக்கிங் டீல்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜை வலுப்படுத்துவதும் பங்குகள் வெளியிடுவதும் சிங்கின் எதிர்கால திட்டங்கள்


சிங் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா, அப்பா இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள். தன் நிறுவனத்துக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் பங்குகள் வெளியிடும் திட்டமும் வைத்திருக்கிறார் இவர்.

ஷாப்க்ளூஸ் இணையதளம் சமீபத்தில் நடத்திய சர்வே அதன் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் குறைந்த விலையில் கிடைக்கும் பழுதுபார்க்கப்பட்ட பழைய போன்களையே வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

ராக்கிங் டீல்ஸ் வரும் காலங்களில் போன் சந்தையை குலுங்கச் செய்யும் என்றே தோன்றுகிறது.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Flying top

    பீனிக்ஸ் பறவை!

    போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • He started transport business with a single lorry, but today owns 4,300 vehicles

    போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்

    தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Success story of indigo airlines

    உயரப் பறத்தல்

    விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை

  • How an IIM Gold Medalist  established a Rs 5 crore vegetable business

    வேர்களால் கிடைக்கும் வெற்றி

    அகமதாபாத் ஐஐஎம்மில் படிப்பு முடித்தால் கை நிறைய சம்பளத்துக்கு பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலை செய்யப்போவார்கள். ஆனால் கௌஷ்லேந்திரா, பீஹாரில் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். ஜி.சிங் எழுதும் வெற்றிக்கதை

  • Redesigning small shops

    மளிகையில் மலர்ச்சி!

    தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • Story of believing in your dreams

    ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!

    அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை